Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு முதல் சிக்கியது 2.2 கிலோ கடத்தல் தங்கம் வரை - டாப் 10 நியூஸ்!-today afternoon top 10 news with tamil nadu national and world on august 14 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு முதல் சிக்கியது 2.2 கிலோ கடத்தல் தங்கம் வரை - டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு முதல் சிக்கியது 2.2 கிலோ கடத்தல் தங்கம் வரை - டாப் 10 நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Aug 14, 2024 01:16 PM IST

Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு, பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி, 2.2 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு முதல் சிக்கியது 2.2 கிலோ கடத்தல் தங்கம் வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு முதல் சிக்கியது 2.2 கிலோ கடத்தல் தங்கம் வரை - டாப் 10 நியூஸ்!

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு..

இறந்தவர்களின் பெயரை நீக்குவதில் கவனமுடன் செயல்படுமாறு, ரேஷன் கார்டுதாரர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவர் இறந்துவிட்டால், அடக்கம் செய்யும்போது இறந்தவரின் ஆதார் கேட்கப்படுகிறது. சிலர் தவறுதலாக இறந்தவரின் ஆதாருக்கு பதிலாக, தங்களின் ஆதாரை வழங்குகின்றனர். மின் ஆளுமை முகமை (e-gov) வாயிலாக ஆதார் எண் அடிப்படையில், ரேஷன் கார்டில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுவதால் கவனமாக செயல்பட வலியுறுத்தியுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் பலி

சிவகாசி அருகே உள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

ஹஜ் யாத்திரை விண்ணப்பப்பதிவு தொடக்கம்

அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதற்கு செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக இந்தாண்டில் https://hajcommittee.gov.in/ இணையதளத்துடன் சேர்த்து, HAJ Suvidha APP என்ற பிரத்யேக செயலி மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக்கு 1,75,025 இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.

மாநில அரசுகளுக்கு உரிமை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார். கனிமவள நிலம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், 2005 முதல் மத்திய அரசு வசூலித்த கனிம உரிமைத் தொகையை, 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1,037 பேருக்கு குடியரசுத் தலைவர் வீர தீர செயல் விருது

சுதந்திர தினத்தையொட்டி, 1,037 பேருக்கு குடியரசுத் தலைவரின் வீர தீர செயல்கள், சேவைளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று நாளையுடன் 78 ஆண்டுகளாகிறது. இதையொட்டி, போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 1,037 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. அவர்களில் 91 பேர் உபி.யையும், 23 பேர் தமிழக காவல்துறையையும் சேர்ந்தவர்களாவர்.

பள்ளிகளுக்கு உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் தியாகிகளை அழைத்து, சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம். ஆனால், பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

2 மடங்கு கட்டணம் உயர்வு

சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு அதிகளவில் பயணிகள் செல்வதால், ஆம்னி பேருந்துகளை தொடர்ந்து, விமானக் கட்டணமும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301லிருந்து ரூ.10,796ஆகவும், மதுரைக்கு ரூ.4,063லிருந்து ரூ.11,716ஆகவும், திருச்சிக்கு ரூ.7,192ஆகவும், கோவைக்கு ரூ.5,349ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

100 வந்தே பாரத் ரயில் ஒப்பந்தப்புள்ளி ரத்து

100 வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தப் புள்ளியை ரயில்வே ரத்து செய்துள்ளது. ரூ.30,000 கோடிக்கு 100 அலுமினிய ரயில்களை கட்டமைத்து, 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க ஒப்பந்தபுள்ளியை 2022இல் ரயில்வே கோரியது. இதை பிரான்சின் அல்ஸ்டாம் நிறுவனம் எடுத்ததையடுத்து நடந்த பேச்சில், ஒரு ரயில் தயாரிக்க அல்ஸ்டாம் ரூ.145 கோடி கோரியது. ரயில்வே ரூ.140 கோடி கூறியதால் பேச்சு தோல்வியடைந்ததால் ஒப்பந்தப்புள்ளி ரத்தானது.

உலகளவில் அதிகரிக்கும் பணிநீக்கம்!

உலகம் முழுவதும் இந்தாண்டு மட்டும் சுமார் 1.30 லட்சம் ஊழியர்கள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக layoffs.fyi-ன் அறிக்கையில் தகவல். இந்தியாவில் 32 பெரு நிறுவனங்களில் இருந்து சுமார் 8,000 பேர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். செலவின் குறைப்பு நடவடிக்கையே பலரின் பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

திருச்சியில் 2.2 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1.53 கோடி மதிப்பிலான 2,291 கிராம் தங்க செயின்களை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.