Tamil Top 10 News: MBBS ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு முதல் திருப்பதியில் தமிழர்கள் புறக்கணிப்பு வரை - டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News: MBBS, BDS, ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு, பிரதமர் மோடிக்கு பத்ம விருதாளர்கள் கடிதம், திருப்பதியில் தமிழர்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
MBBS, BDS, ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
MBBS, BDS படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை 1.53 லட்சம் பேர் எழுதினர். இதில் 89,198 பேர் தேர்வான நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேர 42,951 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 9,050 MBBS, 2,200 BDS இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஆளுநர் டெல்லி பயணம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் ஏற்கனவே ஆக.1ம் தேதி டெல்லி சென்று திரும்பிய நிலையில், 2வது முறையாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு பத்ம விருதாளர்கள் கடிதம்!
ஜ"கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள், மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகின்றது. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது குறித்து பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
வங்கி அதிகாரிகளுக்கு கருணையே இல்லையா?
வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு, அரசு வழங்கிய நிவாரணத் தொகையில், கேரள கிராம வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் மாதத் தவணை பிடித்தம் செய்திருப்பது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கொடூரமான நடவடிக்கை என, அம்மாநில அமைச்சர் வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 ஆயிரம் செயற்கைக்கோள்கள்: மயில்சாமி அண்ணாதுரை
கொரோனா காலத்தில் 5 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ EX விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் 6-7 ஆண்டுகள் தான் எனவும், எனவே ஆயுட்காலம் ஒவ்வொன்றாக முடியும் தருவாயில், நாம் புதியவைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ராக்கெட் ஏவுவதற்கு உலகிலேயே சிறந்த குலசேகரப்பட்டினம் தான் என தெரிவித்துள்ளார்.
வானிலை அப்டேட்
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
படகு சேவை நிறுத்தம்
கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வாக இருப்பதால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம். காலை 9.30 மணிக்கு பிறகு கடலின் தன்மையை பொறுத்து சுற்றுலா படகு சேவை தொடங்க வாய்ப்பு என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது
கிருஷ்ணகிரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது.
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 306 மில்லியன் கன அடியாக உள்ளது.
திருப்பதியில் தமிழர்கள் புறக்கணிப்பு?
திருப்பதியில் முக்கிய இடங்களில் இடம்பெற்றிருக்கும் தர்ம தரிசனம் குறித்த அறிவிப்பு பலகை ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கில் மட்டுமே இருப்பதால் தமிழ் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தெலங்கானா அமைச்சர்கள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்களை கொண்டு வருபவர்களுக்கு VIP தரிசனம், தங்குமிடம் சுலபமாக கிடைப்பதாகவும், ஆனால் தமிழக அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கவே மாட்டார்கள் எனவும் கூறுகின்றனர்.
டாபிக்ஸ்