Tirupathi Temple: வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் - எதற்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tirupathi Temple: வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் - எதற்கு தெரியுமா?

Tirupathi Temple: வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் - எதற்கு தெரியுமா?

Published Jul 09, 2024 04:26 PM IST Karthikeyan S
Published Jul 09, 2024 04:26 PM IST

  • ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில், இந்தாண்டு ஆனிவார ஆஸ்தானம் வரும் 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மூலவர் சன்னதி உட்பட கோயிலில் உள்ள உப சன்னதிகள், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம், கோயில் முகப்பு கோபுர வாசல், அனைத்து மதில்கள், மேற்கூரைகள் உள்ளிட்டவை பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நைவேத்திய பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

More