Tamil Top 10 News: 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் வரை - டாப் 10 நியூஸ்-today morning top 10 news with tamil nadu national and world on august 14 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் வரை - டாப் 10 நியூஸ்

Tamil Top 10 News: 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் வரை - டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Aug 14, 2024 08:20 AM IST

Tamil Top 10 News: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிர விசாரணை, இளநிலை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் வரை - டாப் 10 நியூஸ்
Tamil Top 10 News: 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் வரை - டாப் 10 நியூஸ்

மிக கனமழைக்கு வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத குளிர்பானங்கள் குறித்து புகார் அளிக்கலாம்!

"சென்னையில் அங்கீகரிக்கப்படாத குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதை கண்டால், உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் 94404 23222 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்." என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

என்ன ஓர் அற்புதமான பொய்!

மக்களவை தேர்தல் கடைசிக் கட்டத்தின்போது மோடி என்ன செய்தாரென நினைவிருக்கிறதா?..மே 30 முதல் ஜூன் 1, 2024 வரை கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானம் செய்து கொண்டிருந்தார். புகைப்படங்களும், வீடியோக்களும் கூட வெளியாகின. ஆனால் இப்போது BBC அனுப்பிய RTI மனுவுக்கு கிடைத்த பதிலில் “அந்த தினத்திலும் அவர் அலுவல் பணியில் இருந்தார்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது என்ன ஓர் அற்புதமான பொய்! என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளார்.

அஸ்வத்தாமனிடம் போலீஸ் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த விவகாரத்தில் அவருடன் மோதல் போக்கு ஏற்பட்டது? எத்தனை ஆண்டுகளாக உங்கள் தரப்புக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் முன் விரோதம் இருந்தது? ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை எப்படி ஒருங்கிணைத்தீர்கள்? அவர்களுக்கு யார் யார் மூலமாகப் பணம் விநியோகம் செய்யப்பட்டது? என அஸ்வத்தாமனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் அளிக்கும் பதிலை வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

நீர்வரத்து குறைவு

நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக குறைப்பு. இதில் இதில் 21,500 கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாகவும், மீதமுள்ள 2,500 கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.

சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஜூன் மாதம் வெறி நாய் கடித்த சிறுவன், தாமதமான சிகிச்சை காரணமாக ரேபிஸ் நோயால் உயிரிழப்பு.

நிதி மோசடி - தேவநாதனிடம் 8 மணி நேரம் விசாரணை

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சுமார் 8 மணிநேரமாக போலீசார் விசாரணை நடத்தினர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தேவநாதன் யாதவ் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதன்ஷு திரிவேதி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு சமீபத்தில் அதிகரித்தது, இங்குள்ள குற்றவாளிகளின் பலத்தை அதிகரித்துள்ளது என மாநிலங்களவை பாஜக எம்.பி சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ-க்கு மாற்றம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. இதன்படி அகில இந்திய இடங்களுக்கு இன்று முதல் 23ஆம் தேதி வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5 முதல் 13ஆம் தேதி வரையும், 3ஆம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.