Top 10 News: செங்கோட்டையில் 77வது சுதந்திர தினம்..டாஸ்மாக் விடுமுறை - மேலும் முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 News: செங்கோட்டையில் 77வது சுதந்திர தினம்..டாஸ்மாக் விடுமுறை - மேலும் முக்கிய செய்திகள்!

Top 10 News: செங்கோட்டையில் 77வது சுதந்திர தினம்..டாஸ்மாக் விடுமுறை - மேலும் முக்கிய செய்திகள்!

Karthikeyan S HT Tamil
Aug 15, 2023 07:10 AM IST

Top 10 News August 15, 2023: உள்ளூர் முதல் உலகம் வரை, தேசம் முதல் தமிழகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

டெல்லி செங்கோட்டை
டெல்லி செங்கோட்டை

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்தோறும் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 451-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களுக்கு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசம்

நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றிக் காவல் பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10-வது முறையாக கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

தேவை போக மீதமுள்ள நீரை, தமிழ்நாட்டுக்கு தருவதில் எந்த பிரச்னையும் இல்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உலகம்

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை (பிஏபி) சோ்ந்த அன்வருல் ஹக் கக்காா் (52) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அமெரிக்க நாட்டில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று 3 நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால், அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

விளையாட்டு

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆ.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி ஆகிய மூவரும் ஓபன் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.