தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tnpsc Group-4 Exam Date Notification For 6224 Vacancies Including Vao

TNPSC Group 4: வி.ஏ.ஓ முதல் தட்டச்சர் வரை 6224 காலி பணியிடங்கள் ரெடி! குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Jan 30, 2024 08:31 AM IST

“TNPSC Group-4 Exam: இதற்கான விண்ணப்பங்களைwww.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது”

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர். தனி செயலாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் தேர்வானது பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும். 

தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு திருத்தங்களை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் தமிழ்நாடு வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும். 

தேர்வு நடைபெறும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட எழுதும் பொருளான கருப்பு-மை பால்பாயிண்ட் பேனா தவிர, வேறு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிஉ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செல்லுலார் ஃபோன்கள், கால்குலேட்டர்கள், கைக்கடிகாரங்கள், உள்ளடிக்கிய நினைவகத்துடன் கூடிய மோதிரங்கள் புளூடூத் சாதனங்கள், தகவல் தொடர்பு சில்லுகள், ரெக்கார்டிங் சாதனங்கள் தனி துண்டு உள்ளிட்ட எந்த பொருட்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலானவை என்றும் நியாமற்ற வழிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்