Neil Armstrong : சந்திரயான்களுக்கு முன்னோடி! நிலா மன்னன் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Neil Armstrong : சந்திரயான்களுக்கு முன்னோடி! நிலா மன்னன் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்!

Neil Armstrong : சந்திரயான்களுக்கு முன்னோடி! நிலா மன்னன் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்!

Priyadarshini R HT Tamil
Aug 25, 2023 06:20 AM IST

Neil Armstrong : நீல் ஆம்ஸ்ட்ராங், நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங் 1930ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சின்சினாட்டியில் இறந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர், நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர்.

நிலா மன்னன் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்
நிலா மன்னன் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்

ஸ்கவுட்டில் ஈகிள் ரேங்க் பெற்றார். அதுதான் உயர்வான ரேங்க். அவரது 16வது பிறந்த நாளில் அவர் லைசென்ஸ் பெற்ற பைலட் ஆனார். 1947ம் ஆண்டு அவர் கப்பல் விமான படையில் கேடட்டாக இருந்தார். இண்டியானாவின் புர்துவே பல்கலைக்கழகத்தில் ஏரோநாடிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அப்போது நடைபெற்ற கொரிய போரால் அதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மூன்று விமானப்படை விருதுகள் கிடைத்தது. அவர் 1955ம் ஆண்டு அவரது படிப்பை முடித்தார்.

உடனடியாக நேஷனல் அட்வைசரி கமிட்டி பாஃர் ஏரோநாட்டிக்ஸ்க்கு சிவிலியன் ஆராய்ச்சி பைலட் ஆனார். பின்னர் நாசாவின் ஆராய்ச்சியாளர் ஆனார். இவர் 1,100 மணி நேரத்துக்கும் மேல் பறந்து பல்வேறு சூப்பர்சானிக் ஃபைட்டர்களையும், எக்ஸ் – 15 ராக்கெட்களையும் ஓட்டியுள்ளார்.

அதன் இரண்டாவது குழு விண்வெளி வீரர்களுடன், 1962ம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் சேர்ந்தார். 1966ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி ஜெமினி 8ன் காமாண்ட் பைலட் ஆனார்.

1969ம் ஆண்டு ஜீலை 16ம் தேதி, ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் இ.அல்டிரின், ஜீனியர் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் அப்போலோ 11 விண்களத்தில் நிலாவுக்கு பயணம் செய்தார். நான்கு நாட்கள் கழித்து, அமெரிக்க நேரப்படி மாலை 4.17 மணிக்கு ஈகிள் லூனார் லேண்டிங் மாடூயுல், ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழிகாட்டுதல்படி, தென்மேற்கு விளிம்பில் இறங்கியது.

சரியாக 1969ம் ஆண்டு ஜீலை 20ம் தேதி இரவு 10.56 மணிக்கு ஆர்ம்ஸ்ட்ராங் ஈகிளில் இருந்து நிலாவில் இறங்கி, நிலாவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார். ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் போதிய உபகரணங்கள் மற்றும் முன் தயாரிப்புகளுடன் அங்கு இருந்து, நிலவின் தரைப்பரப்பில் மாதிரிகளை சேகரித்துவிட்டு, எண்ணிலடங்கா புகைப்படங்களையும் எடுத்தனர்.

21ம் தேதி பூமிக்கு திரும்ப துவங்கினர். பின்னர் 18 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர். நிலாவில் இருந்த நுண் கிருமிகள் அவர்களை தாக்கியிருக்கக்கூடும் என்பதால், இந்த தனிப்படுத்தல் இருந்தது. நிலவில் அவர் அன்று தரையிறங்கி செய்த ஆய்வுகள், இன்று நாம் சந்திரனை ஆராய்ச்சி செய்ய வெற்றிகரமாக செயற்கைகோள்களை அனுப்புவதற்கு விதையானது. பின்னர் நாசாவிலிருந்து வெளியேறி அவர் பேராசிரியராக பணியாற்றினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.