TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பயிற்சித் தொடர் - பகுதி 10
இந்நிலையில் அறிவியலில் இருந்து தோராயமாக 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் இருக்கும் அளவீடுகள், விசையும் இயக்கமும், வெப்பம், மின்னியல், காந்தவியல், ஒளியியல், அண்டம் மற்றும் விண்வெளி, ஒலி, பாய்மங்கள், அணுக்கரு இயற்பியல் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றில் இருந்த முக்கிய உதவிக்குறிப்புகளைக் கீழே காண்போம்.
அளவீடுகள்: ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க ஆர்க்கிமிடிஸ் விதி பயன்படுகிறது.
- திரவங்களின் பருமனை அளக்க உதவும் வேறு அலகுகள் கேலன்(Gallon), அவுன்ஸ் (Ounce) மற்றும் குவார்ட்(Quart). 1 கேலன் என்பது 3,785 மி.லி; ஒரு அவுன்ஸ் - 30 மி.லி.; 1 குவார்ட் - 1 லிட்டர்.
- அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலைமானி: இதன்மூலம் ஒரு பொருளை நேரடியாகத் தொடாமல், அதன் வெப்பநிலையை அளந்தறிய முடியும்.
- மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் இடையில் இருக்கவேண்டும்.
- 6.023*10ன் அடுக்கு 23 என்ற எண்ணானது அவகாட்ரோ எண் என அழைக்கப்படுகிறது.
- அடிப்படை அளவுகளை அளவிடப் பயன்படும் எண்கள் ‘அடிப்படை அலகுகள்’ என்றும்; வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் ‘வழி அலகுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
- நம்மால் கற்பனை செய்து பார்க்கக் கூடிய, மிகக்குறைந்த கால அளவு கண் இமைக்கும் நேரம். இது 1/6.25 விநாடி அல்லது 160 மில்லி விநாடி ஆகும்.
- ஒரு கணம் என்பது 1/40 மணி நேரம் ஆகும். அதாவது 1.5 நிமிடம் ஆகும்.
- கழுதைத் திறன்: இது குதிரைத்திறனில் ⅓ மடங்கு ஆகும். இதன் மதிப்பு ஏறக்குறைய 250 வாட் ஆகும்.
- தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் நீளத்திற்கான பிற அலகுகள்; 1 அடி = 30.4 செ.மீ; 1 மீட்டர் = 3.28 அடி; 1 அங்குலம் = 2.54 செ.மீ; ஒரு மீட்டர் என்பது ஏறக்குறைய 40 அங்குலத்திற்குச் சமம் ஆனது.
- தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை 1995ஆம் ஆண்டு, வரையில் துணை அளவுகள் எனத் தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 1995ஆம் ஆண்டில், இவை ’வழி அளவுகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டன.
- தளக்கோணத்தின் குறியீடு ‘ரேடியன்’; திண்மக் கோணத்தின் குறியீடு ‘ஸ்ட்ரேடியன்’
- உணரப்படும் ஒளியின் திறனானது ‘ஒளி பாயம்’ அல்லது ‘ஒளித்திறன்’ எனப்படுகிறது. இதன் SI அலகு ‘லுமென்’(lumen)ஆகும்.
- வரையறை: ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில், ஒரு கேண்டிலா, ஒளிச்செறிவுடைய ஒளியை ஓர் ஒளிமூலம் வெளியிட்டால், அவ்வொளியின் மூலத்தின் திறன் ‘ஒரு லுமென்’ஆகும்.
- 1 TMC (Thousand Million Cubic Feet) என்பது ‘நூறு கோடி’ கன அடி அளவாகும். 1 TMC = 2.83*10ன் அடுக்கு 10 லிட்டர் ஆகும். அதாவது 1 TMC என்பது தோராயமாக 3,000 கோடி லிட்டர் ஆகும்.
- நமக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம், ஆல்ஃபா சென்டாரி சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரத் தொலைவில் உள்ளது. இரவு நேரங்களில் நமது வெறும் கண்ணிற்கு தெரியும் நட்சத்திரங்கள், சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத் தொலைவிற்குள் உள்ளன.
- அடிப்படை அளவுகளின் அலகுகள்:
அலகு | SI அலகு | குறியீடு |
நீளம் | மீட்டர் | m |
நிறை | கிலோகிராம் | kg |
காலம் | விநாடி | S |
வெப்பநிலை | கெல்வின் | K |
மின்னோட்டம் | ஆம்பியர் | A |
பொருளின் அளவு | மோல் | mol |
ஒளிச்செறிவு | கேண்டிலா | cd |
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.