TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஒன்பது!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
இந்நிலையில் அரசியலமைப்புப் பகுதியில் சராசரியாக 11 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அரசியலமைப்புப் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற பேரவை ஆகிய ஈரவைகளையும் கொண்ட மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, பீஹார், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகியவையாகும்.
தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம்?: தமிழ்நாட்டில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 15 விழுக்காடு பேர் அமைச்சராக இருக்கலாம். அதன்படி, 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில், 36 பேர் வரை அமைச்சராக இருக்கலாம்.
நாத்திகம்: கடவுள் மீது நம்பிக்கையில்லாமல் இருத்தல்,
சமயச்சார்பின்மை: அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்;
முகலாயப் பேரரசர் அக்பர் மதசகிப்புத் தன்மைக் கொள்கையைப் பின்பற்றினார். அவருடைய ‘தீன் இலாஹி’மற்றும்’கல்-இ-குல்’ ஆகியவை, அவரின் சமய சகிப்புத் தன்மையை எடுத்துக் கூறுகிறது.
தீன்-இலாஹி - தெய்வீக நம்பிக்கை
கல்-இ-குல்- அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்;
அசோகரின் 12ஆவது பாறை அரசாணை:
அரசு எந்த ஒரு மதம் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக, குற்றம் சாட்டாது என்று கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார். இவர் தனது 12ஆவது பாறை அரசாணையில், அனைத்து மதப் பிரிவினருடனும் சகிப்புத் தன்மையோடும் மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டுமென்று, தம் மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
கஜீராஹோவில் அமைந்துள்ள 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துகோவில் வழக்கமான சிகரத்திற்குப் பதிலாக, இந்து பாணியிலான, சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றுடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அக்பரின் கல்லறை:
அக்பரின் கல்லறை ஆக்ரா அருகில் இருக்கிறது. இதனை சிக்கந்தரா என அழைப்பர். தனது கல்லறையில் இந்து மற்றும் இஸ்லாமிய மற்றும் பிற சமயங்களைச் சார்ந்த கூறுகள் இடம்பெறவேண்டும் என அக்பர் வலியுறுத்தினார். அவரின் ஆசைப்படியே அக்கல்லறையும் அவ்வாறே அமைக்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் ஆண்டு - 1978ஆம் ஆண்டு ஆகும்;
சர்வதேச குழந்தைகள் ஆண்டு - 1979ஆம் ஆண்டு ஆகும்;
ஜான் எஃப் கென்னடியின் கூற்று - ‘’ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதருடைய உரிமையும் குறைக்கப்படுகிறது’'
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம்:
இந்தச் சட்டம் மூத்த முடிமக்கள் மற்றும் பெற்றோருக்குப் பராமரிப்பை வழங்குவதற்கு, அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்களின் சட்டப்பூர்வமான கடமையை உறுதிசெய்கிறது. முதுமைக் காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் 2007ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்.
சைரஸ் சிலிண்டர்:பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் அடிமைகளை விடுவித்து, மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தைக் கோரினார். இந்த ஆணைகள் ‘கியூனிபார்ஃம்’ எழுத்துகளில், ‘அக்காடியன்’மொழியில், சிலிண்டர் வடிவிலான சுட்ட களி மண்ணில் பதிவுசெய்யப்பட்டன. இது ஐக்கிய நாடுகள் சபையின் 6 அலுவல் மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் நான்கு விதிகளுக்கு இணையாக உள்ளன.
டாபிக்ஸ்