TNPSC Group 4: வி.ஏ.ஓ முதல் தட்டச்சர் வரை 6224 காலி பணியிடங்கள் ரெடி! குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!
- “TNPSC Group-4 Exam: இதற்கான விண்ணப்பங்களைwww.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது”
- “TNPSC Group-4 Exam: இதற்கான விண்ணப்பங்களைwww.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது”
(1 / 9)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
(2 / 9)
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர். தனி செயலாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(3 / 9)
ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு நடைபெறும் தேர்வானது பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(4 / 9)
ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
(5 / 9)
தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு திருத்தங்களை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(6 / 9)
இதில் தமிழ்நாடு வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
(7 / 9)
தேர்வு நடைபெறும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட எழுதும் பொருளான கருப்பு-மை பால்பாயிண்ட் பேனா தவிர, வேறு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிஉ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(8 / 9)
செல்லுலார் ஃபோன்கள், கால்குலேட்டர்கள், கைக்கடிகாரங்கள், உள்ளடிக்கிய நினைவகத்துடன் கூடிய மோதிரங்கள் புளூடூத் சாதனங்கள், தகவல் தொடர்பு சில்லுகள், ரெக்கார்டிங் சாதனங்கள் தனி துண்டு உள்ளிட்ட எந்த பொருட்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்