TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்
இந்நிலையில் அறிவியலில் இருந்து தோராயமாக 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் இருக்கும் அளவீடுகள், விசையும் இயக்கமும், வெப்பம், மின்னியல், காந்தவியல், ஒளியியல், அண்டம் மற்றும் விண்வெளி, ஒலி, பாய்மங்கள், அணுக்கரு இயற்பியல் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றில் இருந்த முக்கிய உதவிக்குறிப்புகளைக் கீழே காண்போம்.
- போர்ட் நைட் (FortNight): ஃபோர்ட்நைட் என்பது இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்கள் ஆகும்.
- மனித உடலில் உள்ள அனைத்து ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் 96,000 கி.மீ. ஆகும்.
- ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம் ஆகும்.
- பச்சோந்தியின் நாக்கின் நீளம், அதன் உடம்பின் நீளத்தை விட, இரு மடங்காகும்.
- ஒரு முட்டையின் ஓடானது, அந்த முட்டையின் எடையில் 12%ஆகும்.
- பிறக்கும் பொழுது, ஒட்டகச் சிவிங்கிக் குட்டி ஒன்றின் உயரம் 1.8 மீட்டர்(6 அடி)
- பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு ’’நேர்த்தகவில்’’ இருக்கும். பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும், இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். ஆனால், எடை குறையும்.
- நிலவில் ஈர்ப்பு விசை, புவியைப் போல, ஆறில் ஒரு பங்கு இருக்கும். எனவே, நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.
- பியர் வெர்னியர்(கி.பி.1580-1637) என்னும் பிரான்சு நாட்டு அரசு அலுவலர், அடிப்படையில் பொறியாளர் ஆவார். இவர் அளவியல் துறையில் துல்லிய அளவுகோலான ‘’வெர்னியர் அளவுகோல்’’ என்னும் கருவியை வடிவமைத்தார்.
- அடர்த்தி: சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவை, நீரை விட அடர்த்தி குறைவானவை. விளக்கெண்ணெயின் அடர்த்தி 961 கி.கி/மீ^3. விளக்கெண்ணெயில் ஒரு துளி நீரை இடும்போது, நீர்த்துளி மூழ்கும். ஆனால், நீரில் விடும் ஒரு துளி விளக்கெண்ணெய் மிதந்து ஒரு படலத்தை உருவாக்கும். எனினும், ஒரு சில எண்ணெய் வகைகள், நீரைவிட அதிக அடர்த்தி கொண்டவை.
- உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தினை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்தார்.
- அலைவு இயக்கம் அனைத்துமே, கால ஒழுங்கு இயக்கமாக அமையும். அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாகக் காணப்பட்டது.
- பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கலின் நினைவாக, அழுத்தத்தின் SI அலகிற்கு ’பாஸ்கல்’ எனப் பெயரிடப்பட்டது.
- சிறுத்தையானது மிக வேகமாக ஓடும் விலங்கு ஆகும். இதனுடைய வேகம் 25 மீ/ வி முதல் 30 மீ/வி வரை ஆகும். இரண்டே விநாடிகளில் தனது வேகத்தினை 0-விலிருந்து, 20 மீ/வி ஆக மாற்றிக்கொள்ளும் திறனுடையது.
- 1 கி.மீ/ மணி= 5/18 மீ/வி
- 1 கி.மீ= 1000 மீ
- ஒரு மணி = 3600 விநாடி
- 1 கி.மீ/ மணி = 1000 மீ/ 3600 வி = 5/18 மீ/ வி
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.