தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Files Issue: பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்!

DMK Files Issue: பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 10, 2023 12:08 PM IST

CM Stalin Case Against Annamalai: முதலமைச்சர் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக கூற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கறிஞர் ஜி. தேவராஜன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

ஏப்ரல் 14ஆம் தேதி 'DMK FILES' என்ற பெயரில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்து இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், வழக்கறிஞர் ஜி. தேவராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

திமுகவின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார். அதில், திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து உள்ளது என கூறி விடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

இதை மறுத்த திமுகவினர், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர்.

அத்துடன் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்போவதாக திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு கூறியிருந்தார்.

இதையடுத்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்