Kodanadu murder Case: கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kodanadu Murder Case: கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

Kodanadu murder Case: கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

Kathiravan V HT Tamil
Jun 29, 2024 02:12 PM IST

TN Assembly 2024 Live: சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என முதலமைச்சர் பதில்

கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
கொடநாடு கொலை வழக்கில் வெளிநாட்டினருக்கு தொடர்பா? பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.

கொடநாடு கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் பதில் 

காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். 

சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.   அதற்காக, அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்  

  • 40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா,
  • 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா,
  • 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம், (மேசையைத் தட்டும்
  • 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா,
  • 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா,
  • 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா,
  • 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம்  

இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான். வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள்.

காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மற்ற அறிவிப்புகளும் விரைவில் அரசாணையாக ஆகும் என்று உறுதி அளிக்கிறேன். கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன என தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.