தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mdmk: ’மதிமுக கட்சி அலுவலகம் யார் பெயரில் உள்ளது தெரியுமா? ’போட்டு உடைத்த திருப்பூர் துரைசாமி

MDMK: ’மதிமுக கட்சி அலுவலகம் யார் பெயரில் உள்ளது தெரியுமா? ’போட்டு உடைத்த திருப்பூர் துரைசாமி

Kathiravan V HT Tamil
May 02, 2023 12:27 PM IST

”முந்தா நேத்து வியாபாரம் செய்தீர்கள் தற்போது கட்சிக்கு வந்த உடனேயே தலைவர் என்றால் என்ன அர்த்தம்?” துரைவைகோவின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ - மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ - மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய திருப்பூர் துரைசாமி, வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக தொடங்கப்பட்டது. அண்ணா மேல் சத்தியம் செய்து என் குடும்பம் அரசியலுக்கு வராது என்றார். ஆனால் அவரது மகனை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார். முந்தா நேத்து வியாபாரம் செய்தீர்கள் தற்போது கட்சிக்கு வந்த உடனேயே தலைவர் என்றால் என்ன அர்த்தம்?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (MDMK Vaiko)

இந்த விவகாரம் குறித்து கடந்த அக்டோபர் மாதம் அவரிடம் ஒன்றரை மணி நேரம் வைகோ உடன் பேசினேன். உயர்நிலை குழு கூட்டத்தில் அவருக்கு பெரிய எதிர்ப்பு இருந்தது.

திமுகவிலேயே நான் தான் தற்போது சீனியர், அண்ணா காலத்திலேயே பொதுக்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களில் நான் மட்டும்தான் தற்போது உள்ளேன். மற்றவர்கள் எல்லாம் எனக்கு பின்னால் வந்தவர்கள்தான். என்னை யாரும் பின்னிருந்து இயக்கவில்லை. தொண்டர்களை ஏமாற்றுவதற்கு பதில் நம்முடைய பலவீனத்தை உணர்ந்து திமுகவில் சேர்ப்பது நன்மை என்று சொன்னேன். கட்சியை பலப்படுத்த முடியாது என்றார்.

கேள்வி:- மதிமுகவை திமுகவுடன் இணைப்பதன் மூலம் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?

பதில்:- வைகோ சொன்னதில் எதிலும் அவர் நிற்கவில்லை; ஈழத்தமிழர் விவகாரத்தில் யுத்த காலத்தில் அங்கே இருப்பவர்களை என்ன பேசினார் என்பது வழக்கறிஞர் தேவதாஸுக்கு தெரியும். இதெல்லாம் அவரது வீழ்ச்சிக்கே காரணமாக அமைந்துவிட்டது. மதிமுகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது. திமுகவை விட இந்த கொள்கை சிறப்பாக மதிமுகவில் உள்ளது என்று வைகோ சொல்ல என்ன இருக்கிறது.

கேள்வி:- தொழிற்சங்க சொத்தை கட்சி சொத்தாக சேர்க்க கூட நீங்கள் விரும்பவில்லை என்று சில மாவட்ட செயலாளர்கள் சொல்கிறார்களே?

பதில்:- தொழிற்சங்கம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. தொழிற்சங்கம் என்பது தொழிற்சங்க சட்டப்படி நடக்ககூடிய அமைப்பு. அது தொழிற்சங்க விதிகளுக்கு மட்டுமே கட்டுப்படும்.

இந்த தொழிற்சங்க சொத்துக்கள் ஒன்றுகூட என்பெயரில் வாங்கப்படவில்லை. சங்கத்தில் இருந்து ஒரு பைசா எடுக்க வேண்டுமென்றால் பொதுச்செயலாளரும், பொருளாளரும் கையெழுத்துப்போட்டால் மட்டுமே எடுக்க முடியும்.

ஆனால் இதை சொன்ன வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். நான் வாங்கிய சொத்துக்களை பொதுச்செயலாளர், பொருளாளர் பெயரில்தான் வாங்கி உள்ளேன். ஆனால் நீங்கள் வாங்கி உள்ள தாயகம் யார் பெயரில் உள்ளது. வைகோ பெயரில்தான் உள்ளது என்று வைகோவிடமே நேரடியாக கடிதத்தில் எழுதி உள்ளேன். இது தொடர்பாக வைகோவிடம் இருந்து கடிதம் வராது என கூறி உள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்