Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi Firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

Kathiravan V HT Tamil
Jul 16, 2024 03:09 PM IST

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தரப்பில், மனித உரிமை ஆணைய சட்டப்படி உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதால் தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!
Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

ஹென்றி திபேன் வழக்கு 

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன் வழக்கு தொடர்ந்து இருந்தார்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கில் வாதங்களை முன் வைத்த துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பு, ”மனித உரிமை ஆணைய சட்டப்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது” என வாதிட்டது. 

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தரப்பில்,  மனித உரிமை ஆணைய சட்டப்படி உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதால் தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூத்துக்குடி மக்களுக்கு அநீதிக்கு எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.  

மேலும், தூத்துக்குடியில் தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார்.  

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் பின்னணி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

ஆணையம் விசாரணை

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் 2018, மே 23ல் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. 36 கட்ட விசாரணையில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பி,1048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இறுதி அறிக்கை தாக்கல்

3000 பக்கங்கள் கொண்ட விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 2022-ம் ஆண்டு மே 18 அன்று நீதிபதி அருணா ஜெகதீசன் சமர்பித்தார். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது.

4 காவலர்கள் சஸ்பெண்ட்

ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் தெரிவித்தார். மேலும், ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனவும் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூட்டில் நேரடியாக ஈடுபட்டதாக அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை, முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.