தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruma: ’வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!’ விசிக விருது வழங்கும் நிகழ்வில் திருமாவளவன் வேதனை

Thiruma: ’வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!’ விசிக விருது வழங்கும் நிகழ்வில் திருமாவளவன் வேதனை

Kathiravan V HT Tamil
May 25, 2024 11:18 PM IST

Thirumavalavan About Vengaivayal: வேங்கைவயலில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. குடிக்கிற தண்ணீரில் மனித கழிவை கலக்கிறான். மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே சாதி பெயரை சொல்லும் நிலை உள்ளது.

’வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!’ விசிக விருது வழங்கும் நிகழ்வில் திருமாவளவன் வேதனை
’வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!’ விசிக விருது வழங்கும் நிகழ்வில் திருமாவளவன் வேதனை

ட்ரெண்டிங் செய்திகள்

ஓபிசி மக்கள் அரசியல்படுத்தப்பட்ட வேண்டும் 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் அரசியல்படுத்தப்பட வேண்டும் என பொதுவாக எல்லோரும் பேசுகிறார்கள்.  ஆனால் விசிக அதில் இருந்து மாறுபட்டு ஓபிசி மக்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும் என்பதை உயர்த்தி பிடிக்கிறோம்.

இந்தியாவில் ஏன் புரட்சி ஏற்படவில்லை?

எல்லா விடுதலை அரசியலும் சேரியில் வந்துதான் பேசப்படுகிறதே தவிர ஊர் தெருவில் பேசப்படுவதில்லை. ஏன் இந்தியாவில் புரட்சி நடக்கவில்லை என்றால், ஏன் இந்தியாவில் சாதி ஒழிப்பு நடக்கவில்லை என்றால், ஏன் இந்தியாவில் புரட்சிகர மாற்றம் நிகழவில்லை என்றால் உண்மையில் இது எங்கே பேசப்பட வேண்டுமோ அங்கே பேசப்படவில்லை. பாதிக்கப்பட்ட தலித்துகளிடம்தான் இந்த அரசியல் பேசப்படுகிறது. தலித் அல்லாதவர்கள் இடையே இது இன்னும் வலுவாக பேசப்பட வேண்டும். 

சனாதனத்தை பாதுகாப்பது யார்?

சனாதனத்தை பாதுகாப்பது யார்?, சனாதன சக்திகளுக்கு உற்ற துணையாக இருப்பது யார்? பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் படுத்து உருண்டால் புண்ணியம் கிடைக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு நம்பி, அந்த எச்சில் இலைகளில் உருளுவது யார் என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. 

வேங்கைவயல்குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை

வேங்கை வயலில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. குடிக்கிற தண்ணீரில் மனித கழிவை கலக்கிறான். மாவட்ட ஆட்சியர்  முன்னிலையிலேயே சாதி பெயரை சொல்லும் நிலை உள்ளது. இதை கடைப்பிடிப்பவர்கள், நடைமுறைப்படுத்துவர்கள் யார்?,  மோடி, அமித்ஷா யார்? திருவள்ளுவருக்கு காவி உடுத்தி தன்வயப்படுத்தும் அயோக்கிய அரசியலில் ஈடுபடும் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக பேசுபவர்கள் யார்? இன்னும் இந்த சனாதனத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ள உழைக்கும் மக்கள். அவர்கள் அரசியல்படுத்தப்படாமல் இருக்கின்றனர். 

மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியை தூக்கி எரிந்த சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தலித் அமைப்புகள்தான். ராம் விலாஸ் பாஸ்வான் என்ற அம்பேத்கர் இயக்க தலைவர்தான். 

பாமக மீது விமர்சனம் 

ஆனால் விபி சிங் ஆட்சியை கவிழ்த்த பாஜகவினரை தோளில் தூக்கி சுமப்பவர்கள் யார்?, அவர்களோடு கூட்டணி வைத்து உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி என்றால், அரசியல்படுத்த வேண்டியவர்கள் பாமகவை சேர்ந்தவர்களா, விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

தேர்தல் வரும் போகும், சில கட்சிகள் வெற்றி பெறும், சில கட்சிகள் தோல்வி பெறும். ஆனால் சமூககட்டமைப்பு அப்படியே மாற்றம் இன்றி தொடர்கிறது. சனாதன சக்திகள் பார்ப்பனர்களை தாண்டியும் விரிவடைந்து இருக்கிறது. 

நீயும் இந்து, நானும் இந்து

தலித்துகள், பழங்குடிகள், ஓபிசி, சிறுபான்மையினர்கள் ஒன்று சேர்ந்தால்தான் பகுஜன். பார்பனர்கள் அல்லாத அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் மகாத்மா பூலே, அம்பேத்கர், பெரியார், கான்ஷிராம் ஆகியோர் முன் வைத்த அரசியல். ஆனால் சனாதனவாதிகள் மிக லாவகமாக இதை உடைத்துவிட்டார்கள். இந்துத்துவா அஜெண்டா மூலம் நீயும் இந்து, நானும் இந்து என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டார்கள் என திருமாவளவன் பேசினார். 

 

 

 

 

 

 

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்