Maruthu Aalguraj About BJP: ’ஓபிஎஸ் இல்லாமல் கூட்டணியா?’ கவிதையால் பாஜகவை அலறவிட்ட மருது அழகுராஜ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Maruthu Aalguraj About Bjp: ’ஓபிஎஸ் இல்லாமல் கூட்டணியா?’ கவிதையால் பாஜகவை அலறவிட்ட மருது அழகுராஜ்

Maruthu Aalguraj About BJP: ’ஓபிஎஸ் இல்லாமல் கூட்டணியா?’ கவிதையால் பாஜகவை அலறவிட்ட மருது அழகுராஜ்

Kathiravan V HT Tamil
Feb 28, 2024 08:02 PM IST

“பா.ஜ.க. சேர்த்து வைத்திருக்கும் வாசன், ஜான் பாண்டியன் தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் உள்ளிட்ட தனிமனித ஆட்களின் சேர்க்கையால் அது எட்டு சதவீதத்தையே தொட்டு விட்டாலும்.. அதனால் என்ன பிரயோஜனம்”

பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கருத்து
பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கருத்து

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியில் ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலக் காங்கிரஸ், ஏ.சி.சண்முகத்தின் புதியநீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழருவி மணியனின் காந்திய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மருதுஅழகுராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி உள்ளார். அதில், பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அண்ணாமலையின் நடைபயணத்தால் மூன்று சதவீதத்தில் இருந்து இரட்டிப்பாகி ஆறு சதவீதமாக உயர்ந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டாலும் அதோடு மோடி பிரதமராக வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களின் ஆதரவால் அது ஏழு சதவீதமே ஆகி விட்டாலும் அந்த ஏழு சதவீதத்தோடு பா.ஜ.க. சேர்த்து வைத்திருக்கும் வாசன், ஜான் பாண்டியன் தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் உள்ளிட்ட தனிமனித ஆட்களின் சேர்க்கையால் அது எட்டு சதவீதத்தையே தொட்டு விட்டாலும்.. அதனால் என்ன பிரயோஜனம்

அண்ணா தி.மு.க.வின் பெரும்பகுதி வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஓ.பி.எஸ்.சை முன்வைத்து களமாடினால் மட்டுமே சுமார் முப்பது சதவீத அ.தி.மு.க. வாக்குகளில் இருந்து சுமார் இருபது சதவீத வாக்குகளையாவது தங்களை நோக்கி தாமரை கட்சியால் ஈர்க்க முடியும் என்பதே கள யதார்த்தம் இதனுடன் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வும் அணிசேரும்போது மட்டும் தான் அது குறிப்பிட்ட தொகுதிகளின் வெற்றியை சாத்தியமாக்க முடியும் என்பதே உண்மை..

தி.மு.க., தனது கூட்டணியில் காங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்டுகள் விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் உள்ளிட்ட வாக்கு வங்கியை உறுதிப்படுத்திய கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டு ஏறத்தாழ ஐம்பது சதவீத வாக்குகளை தன்வசம் கொண்டிருக்கும் நிலையில் மேலும்..

எடப்பாடி அமைக்கும் மூன்றாவது அணி தி.மு.க. வுக்கு கூடுதல் வாய்ப்பை உருவாக்கும் சூழலில்...

இதனை தடுத்து பல தொகுதிகளின் வெற்றியை பா.ஜ.க. பக்கம் திருப்ப வேண்டுமென்றால் இதுநாள் வரை எடப்பாடிக்கு சகல வகையிலும் உதவி செய்து அவரை ஒற்றைத் தலைமை என்பதாக பிம்பப்படுத்தி பா.ஜ.க. செய்து வந்த தப்பான அரசியலில் இருந்து அக்கட்சி தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓ.பி.எஸ்.சை பிரதானப்படுத்தி அவர் விரும்புகிற தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டுமே அ.தி.மு.க.வின் பெரும்பகுதி வாக்குகளை பா.ஜ.க. கூட்டணியால் அறுவடை செய்து பயனடைய முடியும் என்பதே நிஜம் இதற்கு மாறாக பா.ஜ.க. தன்னை பூதாகர கணக்குப் போட்டுக் கொண்டு கற்பனை கணக்கோடு அரசியல் விற்பனைக்கு முயன்றால் அக் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையே தேர்தல் முடிவுகள் நிச்சயம் தரும்..

-என்ன நாஞ்சொல்றது

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.