Central Budget 2024: ‘வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது’: முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Central Budget 2024: ‘வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது’: முதலமைச்சர் ஸ்டாலின்

Central Budget 2024: ‘வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது’: முதலமைச்சர் ஸ்டாலின்

Marimuthu M HT Tamil
Jul 21, 2024 11:33 AM IST

Central Budget 2024: வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Central Budget 2024: ‘வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது’: முதலமைச்சர் ஸ்டாலின்
Central Budget 2024: ‘வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது’: முதலமைச்சர் ஸ்டாலின்

ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்:

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதற்கு முந்தைய நிகழ்வாக மத்திய அரசின் நிதித்துறையின் அழைப்பின்பேரில் ஜூலை 21ஆம் தேதியான இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

வழக்கமாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் எப்போதும் ஜூலை மாதம் இறுதியில் நடைபெறும் நிலையில், இந்த கூட்டத்தொடர் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடராக அறிவிக்கப்பட்டது. ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடக்கயிருக்கிறது.

மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்:

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்பில், தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யவேண்டும் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்திய கோரிக்கைகளில், ‘’நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024ல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவியுங்கள்; தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதலை அளியுங்கள்; பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுங்கள்; 

கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளியுங்கள்; தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்; கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்தி அளியுங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்'' என தனது எதிர்பார்ப்பை கோரிக்கையாக வலியுறுத்தியுள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். 

மத்திய பட்ஜெட் குறித்த சில துறையினரின் எதிர்பார்ப்புகள்:

MSME:

’குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க, இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும். எதிர்கால நிலையான வளர்ச்சி மற்றும் உறுதி செய்வதில் மத்திய அரசு ஒத்துழைப்பை நல்கும்’ என்று OpportuneHR-ன் நிறுவனர் மற்றும் இயக்குநர் த்வானி மேத்தா கூறினார்.

சுகாதாரம்:

"இந்தியாவின் மருத்துவத்துறை அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் மலிவான மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும்"என்று சூர்யா கண் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜெய் கோயல் (கண் அறுவை சிகிச்சை நிபுணர், லேசிக் மற்றும் விழித்திரை நிபுணர்) கூறினார்.

ரியல் எஸ்டேட்:

’’ரியல் எஸ்டேட் துறையில் சாத்தியமான வரியை எதிர்பார்க்குகிறோம். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் உட்பட ரியல் எஸ்டேட் இயக்க கொள்கை மறுசீரமைப்பு, செலவு குறைப்பு மற்றும் வரி பகுத்தறிவு ஆகியவற்றின் தேவை, இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் மேல்நோக்கிய பாதையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், வளர்ந்து வரும் பொருளாதார இயக்கவியல் மற்றும் சமூகத் தேவைகளுடன் அதன் சீரமைப்பை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானது” என அஸ்வின் ஷெத் தலைவர் அஸ்வின் ஷெத் கூறினார். 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.