தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bomb Threat: சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் வெடிகுண்டா? .. காலையிலேயே அதிர்ச்சியான பயணிகள்!

Bomb Threat: சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் வெடிகுண்டா? .. காலையிலேயே அதிர்ச்சியான பயணிகள்!

Jul 04, 2024 11:46 AM IST Karthikeyan S
Jul 04, 2024 11:46 AM , IST

  • Bomb Threat: சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அண்மை காலமாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

(1 / 6)

வெளிநாட்டில் இருந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் வாயிலாக அவ்வப்போது அனுப்பப்படுவதாக சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உதவியோடு, மிரட்டல் செய்யும் கும்பலை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

(2 / 6)

இந்த நிலையில், சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(3 / 6)

மிரட்டல் வந்ததை அடுத்து ரயில் நிலையத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

(4 / 6)

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. 

(5 / 6)

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்