தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது.. இறுமாப்பில் இருந்த பாஜக.. 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது - தமிழச்சி!

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது.. இறுமாப்பில் இருந்த பாஜக.. 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது - தமிழச்சி!

Divya Sekar HT Tamil
Jun 08, 2024 01:43 PM IST

Thamizhachi Thangapandian : தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது என தமிழச்சி தங்கப்பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

40க்கு 40 தொகுதிகளில் வெற்றி.. இறுமாப்பில் இருந்த பாஜக.. 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது - தமிழச்சி தங்கபாண்டியன்!
40க்கு 40 தொகுதிகளில் வெற்றி.. இறுமாப்பில் இருந்த பாஜக.. 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது - தமிழச்சி தங்கபாண்டியன்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

மறைந்த தமிழனாக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா வேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த முறை செயின்ட் தாமஸ் மவுண்ட் -வேளச்சேரி இடையேயான ரயில்வே பாதை அமைககும் திட்டம் பாதியில் நிற்கிறது. அதனை நிறைவேற்றிடவும், மழை நீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த முறை முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றிட முயற்சி செய்வேன்.

நீட் நுழைவுத் தேர்வில் பல குளறுபடிகள்

நீட் தேர்வை போன்ற ஒரு மோசடியான தேர்வு இருக்க முடியாது நடைபெற்று முடிந்துள்ள நீட் நுழைவுத் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரே தீர்வாக இருக்க முடியும்.

என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எனவே மக்கள் எப்போது வேண்டுமானாலும் மக்கள் குறைகளை அலுவலகத்தில் அளிக்கலாம்.

இந்தியாவிலேயே 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். அதனால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய அரசியலமைப்பை வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என தெரிவிதார்.

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில்” திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

அப்படியில்லை..

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்...

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது...

அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’” என பதிவிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்