Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி
Edappadi Palanisamy : தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 8 முறை வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியதலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் ரோடு ஷோ நடத்தினார்கள் இருந்தும் பாஜக இங்கு வெற்றி பெறவில்லை என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,
மோடி 8 முறை பிரச்சாரம்
"நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்திற்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். அதேபோல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர்மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்கள்.