தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tanjore Paint Training Tanjore Fusion Painting For Women

Tanjore Paint Training: பெண்களுக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பயிற்சி

Priyadarshini R HT Tamil
Feb 19, 2023 01:52 PM IST

Training for Women: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் பெண்களுக்கு தமிழ்நாடு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்துவருகிறது.

அந்த வகையில் வரும் வாரத்தில் விமன் சேவா டிரஸ்ட்டுடன் இணைந்து  சென்னையில் திறன்மிக்க பயிற்சியாளரை கொண்டு தஞ்சாவூர் 'பியூஷன் பெயிண்டிங்' குறித்த நேரடி பயிற்சியை அளிக்க இருக்கிறது. இந்த பயிற்சியை பெறுவதற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி.

பயிற்சியில் தஞ்சாவூர் பியூஷன் பெயிண்டிங், பிரேம் செய்து (வால் ஹேங்கிங்) உபயோகிக்கும் படங்கள் மற்றும் அதனை துணியில் (அலங்கார பிளவுஸ், புடவை, குஷன் கவர்) பெயிண்டிங் செய்யும் விதங்கள் குறித்து கற்றுத்தரப்படும். மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அனைத்து விவரங்களும் சொல்லிக்கொடுக்கப்படும்.

இதுதவிர கலர் மிக்சிங் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளுக்கு உண்டான அனைத்து பொருட்களும் கையாளுவது எப்படி? என்பது போன்ற எளிமையான வழிகளும் கற்றுத்தரப்படும். இதற்கான மூலப்பொருட்கள் எங்கு வாங்குவது? இதை மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற விவரங்கள் அனைத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். 

தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் இதை வீட்டில் இருந்தே செய்து விற்பனை செய்யலாம் அல்லது கடை அமைத்தும் தொழிலை மேம்படுத்தலாம். 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பெண்கள் 9092906971 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

சங்கத்தின் உறுப்பினராகி விவரங்களை பதிவு செய்து, சங்கத்தின் மூலமாக பயிற்சிகள் மற்றும் ஸ்டால்கள் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில் எங்களது இணையதளத்தில் சென்று பதிவு செய்யலாம்.

பெண்கள் தங்களுடைய அனைத்து தயாரிப்புகளையும், தாங்கள் வாங்கி விற்கும் பொருட்களையும் ஆன்லைன் மூலமாக எந்தவித கட் டணமும் இல்லாமல் விற்பனை செய்வதற்கு எங்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்