தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Colleges Application Date: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் விண்ணப்பம் விநியோகம் எப்போது? வெளியான தகவல்

TN Colleges Application Date: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் விண்ணப்பம் விநியோகம் எப்போது? வெளியான தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2023 01:35 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரிகளில் வரும் 2023-24 கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்பு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அரசு மற்றும் கலை கல்லூரிக்கான விண்ணப்ப விநியோகம் தேதி அறிவிப்பு
அரசு மற்றும் கலை கல்லூரிக்கான விண்ணப்ப விநியோகம் தேதி அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து வரும் கல்வியாண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 633 சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 9ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளநிலை, முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரியின் இணையத்தளத்தில் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 8ஆம் தேதி பன்னிரன்டாம் வகுப்பு தேர்வு முடிந்த பின்னர் உரிய மதிப்பெண் சான்றிதழுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சான்றிதழை பதிவேற்ற வேண்டும்.

அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மே 9ஆம் தேதி முதல்

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அடுத்த 10 நாள்கள் வரை மாணவர்கள் கல்லூரி படிப்புக்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் Bsc, B.com, BA போன்ற இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில்,  Bsc, BA பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. 

இதன் பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெற்றும் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்கு பின்னர் கல்லூரி திறப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்