Tamil Top 10 News: தமிழ் புதல்வன் திட்டம் முதல் அன்புமணி ராமதாஸின் கண்டனம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Tamil Top 10 News: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப்பதக்கம். ஈட்டி எரிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை.
2.நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
நீரஜ் சோப்ராவால் தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை! மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது என ட்வீட்.
3.இனி மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்
உயர்க்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.
4.காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் ஒரே நாளில் 56 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டீல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் காவல்துறையில் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்று வருகின்றது.
5.தமிழக மீனவர்கள் கைது
பாம்பன் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
6.வயநாடு நிலச்சரிவு
வயநாடு பேரிடரில் உயிர்பிழைத்தவர்களை அழைத்து சென்று இறுதிக்கட்ட தேடுதல் பணி நடைபெறும் என முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி.
7.ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து
கேரளாவில் மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து.
8.அர்ஜூன் சம்பத்திற்கு அபராதம்
நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்திற்கு 4000 ரூபாய் அபராதம்.
9.வக்பு திருத்த சட்டத்திற்கு ஈபிஎஸ் எதிர்ப்பு
வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
10.போதை பொருள் நடமாட்டம் - அன்புமணி புகார்
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இது தொடர்பாக இரு முறை நேரில் சந்தித்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்