தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics 2024: நீரஜ் சோப்ரா தலைமை! மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணி - முழு விவரம்

Paris Olympics 2024: நீரஜ் சோப்ரா தலைமை! மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணி - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 05, 2024 05:35 PM IST

2024 பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய தடகள அணியில் மொத்தம் 17 ஆண்கள் மற்றும் 11 பெண் விளையாட்டு வீரர்கள் என 28 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார்.

மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணிக்கு ரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார்
மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணிக்கு ரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வைத்து நடைபெற இருக்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 33வது போட்டியாக அமைந்துள்ளது. ஜூலை 26 முதல் ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய சார்பில் 28 வீரர்கள் கொண்ட இந்திய தடகள அணி பங்கேற்கிறது. இந்த அணியை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெற்றியாளரான நீரஜ் சோப்ரா வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடகள அணியில் 17 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.