Tamil Top 10 news: பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வரையான முக்கிய செய்திகள்
Morning Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Tamil Top 10 news: பெண்களுக்கு ஒரு நாள் மாத விடாய் விடுப்பு முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வரையான முக்கிய செய்திகள்
Morning Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
இன்று விண்ணில் பாய்கிறது SSLV D3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கை கோள் இ.ஓ.எஸ்.08 இந்த செயற்கை கோளை சுமந்தபடி எஸ்.எஸ்.எல்.வி டி -3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
நீலகிரி கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
