தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Governor Rn Ravi's Statement On The Tamil Nadu Dispute

தமிழ்நாடு விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் விளக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 18, 2023 12:50 PM IST

‘காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ''தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ''தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை’- ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  -கோப்புபடம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி -கோப்புபடம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செய்திக்குறிப்பு:

*2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ''தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ''தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்."

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்,

IPL_Entry_Point

டாபிக்ஸ்