NEET முறைகேடு! திசைத்திருப்பும் ஒன்றிய அரசு! ஒரே தீர்வு இதுதான்! விளாசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
NEET: மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.

NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடி உள்ளார்.
ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம்
கடந்த மே 5ஆம் தேதி அன்று 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையில் இடம் பெற்று உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
தேசிய தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேசிய தேர்வு முகமை, இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும், தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்களும்தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குக் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தது.