NEET: ’நீட் தேர்வில் குளறுபடி நடந்தது! ஆனால் வினாத்தாள் கசியவில்லை!’ கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதிபூண்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்
நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் தர அரசு தயாராக உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரியும் கலந்து கொண்டார்.
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
இரண்டாவது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
"மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதிபூண்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
NEET, JEE மற்றும் CUET என 3 முக்கிய தேர்வுகளை நாட்டில் வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், இரண்டு செட் வினாத்தாள்களின் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தேர்வுக்கு முன், தேர்வு நாளில், இறுதி செட் முடிவு செய்யப்படுகிறது என கூறினார்.
ஆறு மையங்களில், தவறான செட் வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டதால் தேர்வு, 40 நிமிடங்கள் தாமதமானது. பிரச்னை தொடர்பானது. அந்த சம்பவம் மட்டும் இரண்டு செட் வினாத்தாள்களின் நடைமுறை திடீரென்று தோன்றவில்லை," என்று தெரிவித்தார்.
ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம்
கடந்த மே 5ஆம் தேதி அன்று 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையில் இடம் பெற்று உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
தேசிய தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேசிய தேர்வு முகமை, இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும், தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்களும்தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குக் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தது.
1563 பேரின் கருணை மதிப்பெண்கள் ரத்து
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1563 பேரின் மதிப்பெண் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பு, “1563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.”
மேலும் இந்தாண்டுக்கான மருத்துவ கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறியது.