Shiv das Meena Transfer: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் இடமாற்றம்! நடந்தது என்ன?-tamil nadu chief secretary shiv das meena has been transferred - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Shiv Das Meena Transfer: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் இடமாற்றம்! நடந்தது என்ன?

Shiv das Meena Transfer: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் இடமாற்றம்! நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Aug 18, 2024 10:50 PM IST

Shiv das Meena Transfer: இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார் என்ற அறிவிப்பை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ஆனால் அப்பொறுப்புக்கு தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக உள்ள முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

Shiv das Meena Transfer: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் இடமாற்றம்! நடந்தது என்ன?
Shiv das Meena Transfer: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் இடமாற்றம்! நடந்தது என்ன?

சிவ்தாஸ் மீனா இடமாற்றம் 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றமும் தொடர்ந்து நடந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக் அப்போதே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அடுத்த தலைமை செயலாளர் யார்?

இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார் என்ற அறிவிப்பை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ஆனால் அப்பொறுப்புக்கு தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக உள்ள முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. 

இறையன்பு முதல் சிவ்தாஸ் மீனா வரை 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற சிலநாட்களிலேயே இறையன்பு ஐ.ஏ.எஸ் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஷிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர். முருகானந்தம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர்தான் அடுத்த தலைமைச் செயலாளராக வாய்ப்புள்ளதாக அப்போதே கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் 49 ஆவது தலைமைச்செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் அவர் பொறுப்பேற்று ஒரு ஆண்டை கடந்த நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.