தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Supreme Court Opposes Justice Anand Venkatesh's Judgment On Viewing Pornographic Films

Anand Venkatesh: ’ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லையா? கொடுமை!’ நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கேள்வி

Kathiravan V HT Tamil
Mar 11, 2024 04:24 PM IST

”Justice Anand Venkatesh: ஆபாசம் படங்களை பார்ப்பது குற்றம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ’ஒரு நீதிபதி எப்படி இது போன்ற கருத்தை சொல்ல முடியும்’ இது கொடுமையானது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்”

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இளைஞர் மீது வழக்குப்பதிவு 

குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை ஆனது கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இளைஞர் மீதான வழக்கு ரத்து

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது; அதனை பிறருக்கு அனுப்புவதுதான் சட்டப்படி குற்றம் என கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

”ஆபாச படங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகிவிட்டனர்”

மேலும் 90’ஸ் கிட்ஸ்கள் எப்படி புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனரோ, அதே போல் 2’கே கிட்ஸ்கள் ஆபாச படங்களுக்கு அடிமை ஆகி உள்ளனர்.  மொபைல் போன் உள்ளிட்ட எலட்ரானிக் கேஜட்டுகளால் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு பொத்தானை அழுத்தினால் எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி எல்லா தகவல்களையும் பெற முடிகிறது. 10இல் 9 டினேஜ் பருவத்தினர் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. 

”உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு” 

எனவே இன்றைய இளைஞர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக, இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து இளம் பருவத்தினரை மீட்க அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் இளம் பருவத்தினர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.  இது தொடர்பாக பள்ளியில் இருந்தே விழிப்புணர்வு வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறி இருந்தார்.

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு 

இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,  ’ஒரு நீதிபதி எப்படி இது போன்ற கருத்தை சொல்ல முடியும்’ இது கொடுமையானது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

ட்விட்டர்:  https://twitter.com/httamilnews 

பேஸ்புக்:  https://www.facebook.com/HTTamilNews 

யூடியுப்: https://www.youtube.com/@httamil 

கூகுள் நியூஸ்: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point