தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Iit : இங்கிலாந்திலும், இந்தியாவிலும் மாறி, மாறி ஏஐ, டேட்டா சயின்ஸ் படிக்கலாம் – சென்னை ஐஐடியில் புதிய கோர்ஸ்

Chennai IIT : இங்கிலாந்திலும், இந்தியாவிலும் மாறி, மாறி ஏஐ, டேட்டா சயின்ஸ் படிக்கலாம் – சென்னை ஐஐடியில் புதிய கோர்ஸ்

Priyadarshini R HT Tamil
May 19, 2023 12:58 PM IST

Chennai IIT : சென்னை ஐஐடியும், இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் கூட்டு முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன. இந்தப்படிப்பை இரு நாடுகளிலும் மாறி, மாறி படிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கால மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு புதிய, புதிய பாடங்களை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடி இங்கிலாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு புதிய படிப்பை தற்போது துவங்கியுள்ளது அதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சென்னை ஐஐடியும், இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் கூட்டு முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறுகையில், இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், பாதி காலம் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்திலும், பாதி காலம் சென்னை ஐஐடியிலும் படிக்கலாம் என்றார்.

ஐஐடி டீன் (சர்வதேச பணி) ரகுநாதன் ரங்கசாமி கூறுகையில், இப்படிப்பில் சேரும் மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால முன்னேற்றங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.

ஐஐடி ஆலோசகர் (சர்வதேசகல்வி திட்டம்) கூறுகையில், அறிவியல் அல்லது பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த முதுநிலை படிப்பில் சேரலாம். உலக அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கும் அங்குள்ள அதிநவீன ஆய்வுக்கூடங்களை பயன்படுத்தி ஆராய்ச்சி பணியில் ஈடுபடவும் இந்த படிப்பு அருமையான வாய்ப்பு என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்