மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 25, 2024 01:05 PM IST

Schools Reopen : பலதரப்பிலும் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து வரும் 6ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 7 திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 10 தேதி பள்ளிகள் திறப்பப்பட்டது. தமிழகம் முழுவதும் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் உடற்பகுதி திறன் தேர்வு, ஆங்கிலம், விருப்ப மொழி பாடம், கணிதம் ஆகிய தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு மட்டும் நடைபெற இருக்கின்றன. அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கும் வரும் இரண்டு நாட்களில் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் இரண்டாம் தேதி நிறைவடையும். அக்டோபர் மூன்றாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை வருகிறது. அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தண்டாடப்படுவதால் அன்று அரசு விடுமுறை ஆகும். இதனால் வெறும் இரண்டு நாட்கள் மட்டும் தான் விடுமுறை தினங்களாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் மகிழ்ச்சி இல்லாத சூழல் இருந்தது. இது ஆசிரியர்களுக்கு நெருக்கடியான சூழலை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீடு செய்யவும் தேர்வு முடிவு தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அரசு 9 நாட்களாக விடுமுறை நாட்களை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை

இதனால் மாணவர்களுக்கு கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் ஆறாம் தேதியுடன் முடியும் நிலையில் அக்டோபர் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பல தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய பிரேக்கிங் செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் , தேசம், உலகம், பொழுதுபோக்கு லைப் ஸ்டெயில் உள்ளிட்ட செய்திகளை தொடர்ந்து படிக்க இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.