தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M.k.stalin: 'அதனால்தான் பொண்ணே கொடுத்தோம்' துர்கா ஸ்டாலின் சகோதரர் சுவாரஸ்ய பேட்டி!

M.K.Stalin: 'அதனால்தான் பொண்ணே கொடுத்தோம்' துர்கா ஸ்டாலின் சகோதரர் சுவாரஸ்ய பேட்டி!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 22, 2023 11:36 AM IST

ஜோசியர் தாராளமாக திருமணம் செய்யலாம். இந்த ஜாதகத்தின் யோகத்திற்கு தமிழகத்தை ஆளும் தகுதி, நாட்டை ஆளும் அரசனுக்கு இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் உள்ளது என தெரிவித்தார் - ஜெய.ராஜ மூர்த்தி

துர்கா ஸ்டாலின் தம்பி
துர்கா ஸ்டாலின் தம்பி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் ஜெய.ராஜ மூர்த்தி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது நெறியாளர் உங்கள் அக்காவை இறை மறுப்பாளர் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். பெரியாரின் தாக்கம் கலைஞருக்கு இருந்தது. பின்னர் பெரியாரின் மீது ஈடுபாடு, அண்ணாவின் மீது ஈடுபாடு இருந்தது. அவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள். என்னை பொறுத்தவரை நாத்திகவாதிகள் ஆத்திக வாதிகள் என பார்ப்பதை விட பகுத்தறிவாதிகள் சிந்தனையாளர்கள் எனலாம். அவர்கள் குடும்பத்தில் ஏன் இப்படி கோயிலுக்கு போகிறாய் என அக்காவை கேட்பது இல்லை என்றார்.

நான் 6ம் வகுப்பு படித்த போது அக்காவிற்கு திருமணம் நடந்து விட்டது. விவிகிரி, நாவலர் நெடுஞ்சழியன்,காமராஜர். நிறைய நடிகர்கள் எல்லாரும் வந்தனர். அப்போது பிரம்மிப்பாக இருந்தது. அக்காவிற்கு நல்லதொரு வாழ்க்கை, நல்ல தொரு குடும்பம் உறவுகள் என செழுமையாக போய்கொண்டிருக்கிறது.

அப்போது மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராக வாய்ப்பே இல்லை என்று பலர் கூறியது குறித்து நெறியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எங்கள் அப்பா முதல்வர் வீட்டு வரன் வந்தபோது ஜாதகம் பார்த்தார். அப்போது ஜோசியர் தாராளமாக திருமணம் செய்யலாம். இந்த ஜாதகத்தின் யோகத்திற்கு தமிழகத்தை ஆளும் தகுதி, நாட்டை ஆளும் அரசனுக்கு இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் உள்ளது என தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதை இருந்து பார்க்க எங்கள் அப்பா இல்லை. அவர் மேயராக இருந்த போது, துணை முதல்வராக இருந்த போது எல்லாம் இருந்தார் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் உழைத்தார். அதோடு அக்காவின் பக்தியும் சேர்ந்து இன்று முதல்வராக உள்ளார்.

நான் அக்காவிடம் அடிக்கடி பேசுவேன். மகளிர் இலவச பேசருந்து திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவை வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் என்று சொன்னேன் என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்