தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  What Is Goondas Act: ‘யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

What is Goondas Act: ‘யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

Kathiravan V HT Tamil
May 12, 2024 08:38 PM IST

”What is Goondas Act: 1980களில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அன்றைய முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க கடும் சட்டம் ஒன்றை இயற்ற விரும்பினார். ”

‘சவுக்கு சங்கர் சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?
‘சவுக்கு சங்கர் சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.

அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டத்தின் வரலாறு குறித்து தற்போது பார்க்கலாம். 

குண்டர் சட்டம் என்றால் என்ன?

குண்டர் சட்டம் என்று பிரபலமாக அறியப்படும் இச்சட்டமானது கொள்ளையடிப்பவர்கள், போதை பொருள் குற்றவாளிகள், தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், வனக்குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், வீடியோ பைரசியில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தடுப்பு சட்டம் 1982 என குறிப்பிடப்படுகிறது.  பொது சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக்காவலில் வைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது. இச்சட்டத்தை பெருநகரங்களில் ஒருவர் மீது பாய்ச்ச மாநகர் காவல் ஆணையர்களையும், கிராம புறங்களில் மாவட்ட ஆட்சியர்களையும் அனுமதிக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை சரியானதா என்று நீதிமன்றமே தீர்மானிக்கும். ஆனால் அரசு தீர்மானித்தால் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். 

1980களில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அன்றைய முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க கடும் சட்டம் ஒன்றை இயற்ற விரும்பினார். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு குண்டர் சட்டத்தை எம்ஜிஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. 

குற்றச்செயல்களில் ஈடுபடும் வன்முறையாளர்களை குண்டர்கள் என்று அழைப்பதால் இச்சட்டம் பொதுவாக குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. 

தொடக்கத்தில் கள்ளச்சாராயம் போன்ற போதை வஸ்துக்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல் தொடர் வன்முறை சார்ந்த குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

வனக்குற்றவாளிகள் சேர்ப்பு

1988ஆம் ஆண்டில் சுற்றுசூழல் சீர்கேடுகளில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் வனக்குற்றவாளிகள் என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டது. 

வீடியோ பைரசி தடுப்பு

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருட்டி விசிடி பிரச்னை சினிமா தொழிலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் திரை உலகினர் வேண்டுகோளுக்கு இணங்க, திரைப்படங்கள் சார்ந்த காட்சிகள். ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட கோப்புகளை பதிப்புரிமையை மீறி சட்டவிரோதமாக வெளியிடும் நபர்களை கட்டுப்பட்ட வீடியோ கொள்ளையர்கள் என்ற சொல் 2004ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் இதில் சேர்க்கப்பட்டது. 

மணல் குற்றவாளிகள் சேர்ப்பு

சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த 2006ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசு குண்டர் சட்டத்தில் மணல் குற்றவாளிகள் என்ற சொல்லை சேர்த்தது. 

சைபர் குற்றம் மற்றும் பாலியல் குற்றவாளிகள் சேர்ப்பு

வளர்ந்து வரும் இணைய வழி குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், 2014ஆம் ஆண்டு சமூக ஊடங்களிலில் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்துகளை பதிவு செய்யும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் இதில் அளிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்