Savukku Shankar Arrest: ’யூடியூபரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!’
”பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது”

யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.
சவுக்கு மீடியா என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வருபவர் சவுக்கு சங்கர். இவர் தொடர்ந்து அரசை விமர்சிக்கும் வகையிலும், பிரச்சனைகளை சுட்டும் வகையிலும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர்.