தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss : இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? - ராமதாஸ் கேள்வி!

Ramadoss : இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? - ராமதாஸ் கேள்வி!

Divya Sekar HT Tamil
Jan 27, 2023 01:19 PM IST

மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணிகளை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் மொத்தமுள்ள 6 இயக்குனர் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், இஎஸ்ஐ இயக்குனர் ஆகிய 4 இயக்குனர் பணிகள் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்து கொள்கின்றனர்!

மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ சேவைகள் இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை. இதனால் மருத்துவத்துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்), மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்கிறார். ஒரு கல்லூரியின் முதன்மையர் பணியை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்?

இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குனர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்? என தெரியவில்லை. மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்