Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!
'Redpix Felix Gerald: சவுக்கு சங்கரின் நண்பரான ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்’

’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் 4ஆம் தேதி அன்று தேனியில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பேட்டியை எடுத்தற்காக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனரும், பத்திரிக்கையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியார் மீது திருச்சி மற்றும் கோவை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.