Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!-felix geralds redpix news agency apologized for savukku shankars comments on female police officers - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Kathiravan V HT Tamil
May 15, 2024 08:55 PM IST

”Savukku Shankar: சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது”

‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!
‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

ரெட்பிக்ஸ் நிறுவனம் விளக்கம்

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுமேலாலர் ஜென் பெலிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

பெண்களின் மான்பை மதிக்கிறோம்

கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார் அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை ப்ரைவேட் செய்கிறோம்

எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி வழக்கு நிலுவையில் உள்ளதாலும் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுக்கு சங்கர் கைதின் பின்னணி

ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலர்கள் சவுக்கு சங்கரை தாக்கியதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு சங்க்ரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் தாக்குதலா?

இந்த நிலையில் பெண் காவலர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் கூறி உள்ளார். 

இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து பெண் காவலர்கள் பாதுகாப்பு உடன் திருச்சிக்கு அழைத்து வந்து உள்ளனர். அப்போது காலை உணவாக சவுக்கு சங்கருக்கு பொங்கல் வாங்கி கொடுத்த போது கண்ணாடியை கழற்ற சொல்லி, பெண் காவலர்கள் கண்ணத்தில் அறைந்ததாக நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும், இடது கையை முறுக்கியதாகவும் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.