தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Please Check The Gold Prize Here

Gold Price: தங்கம் விலை குறஞ்சிருக்கா? எவ்ளோன்னு பாத்துட்டு நகை வாங்க போங்க…!

Priyadarshini R HT Tamil
Jan 21, 2023 12:54 PM IST

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த சிறிய விலை மாற்றத்திற்கே மக்கள் மகிச்சியடைந்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், பவுனுக்கு 40 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராம்ரூ.5325ஆகவும், சவரன் ரூ.42,600ஆகவும் இருந்தது. சனிக்கிழமை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் (22 காரட்) ரூ.5 குறைந்து ரூ.5320க்கும், சவரண் (பவுன்) தங்கம் ரூ.42,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை 

தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகளும், கிலோவுக்கு ரூ.200ம் குறைந்தது. ஒருகிராம் 74 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74,300க்கும் விற்பனை செய்யப்பட்டது..

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம்வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரண் நகையைஅணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும்வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்கநகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

24 காரட் vs 22 காரட்

தங்கம் வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டுவந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட்முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது.

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகைபோல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை ரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.

உலகில்கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்