தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Liquor Arrest : ‘ஊற்றிக்கொடுத்த மாமியார், மருமகன்; உள்ளே தள்ளியது போலீஸ்’ கள்ளச்சாராயத்தால் இறந்த நிலையில் நடவடிக்கை!

Liquor Arrest : ‘ஊற்றிக்கொடுத்த மாமியார், மருமகன்; உள்ளே தள்ளியது போலீஸ்’ கள்ளச்சாராயத்தால் இறந்த நிலையில் நடவடிக்கை!

Priyadarshini R HT Tamil
May 15, 2023 11:21 AM IST

Liquor Arrest : திருத்தணி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்ற மாமியார், மருமகன் கைதுசெய்யப்பட்டனர். 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச்சாரயம் விற்று கை செய்யப்பட்ட மாமியார், மருமகன்
கள்ளச்சாரயம் விற்று கை செய்யப்பட்ட மாமியார், மருமகன்

ட்ரெண்டிங் செய்திகள்

அவரது உத்தரவின்பேரில், எஸ்ஐகள் ராக்கிகுமாரி, குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் காசிநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காசிநாதபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த வேண்டா (45) என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து வேண்டா மற்றும் அவரது மருமகன் அருங்குளம் கண்டிகையைச் சேர்ந்த குருமூர்த்தி (22) ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், குருமூர்த்தி ஆந்திரா மாநிலம் மங்கலம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை பைக்கில் கடத்தி வந்து வேண்டாவிடம் கொடுத்து அப்பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார் 60 லிட்டர் கள்ளச்சாராயம், 45 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேண்டா, குருமூர்த்தி ஆகிய இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவது தொடர் கதையாக உள்ளது. மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை அருந்தி 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் எரி சாராயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எரிசாராயம், கள்ளச்சாராயம் விற்பதை கண்டுபிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களைபின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான்டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்