Top 10 News: ஆஸ்திரியாவை அதிர வைத்த மோடி முதல் ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Top 10 News: ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் முதல், தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
ஆஸ்திரியாவில் பிரதமர் பேச்சு
இந்தியா ஒருபோதும் போரை தொடங்காது, உலகிற்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்து உள்ளோம். மேலும், போரை விட, அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகத்துடன் அறிவையும் நிபுணத்துவத்தையும் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது என ஆஸ்திரியாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
மக்களுடன் முதலமைச்சர் திட்டம்
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை உட்பட 13 அரசு துறைகள் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.
பாஜக உடன் கூட்டணி இல்லை
மக்களவை தேர்தலில் சந்தித்த தோல்விகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை, வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும், பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாக தகவல்.
ஈபிஎஸ் இன்று ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து சிவகங்கை, வேலூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்துகின்றார்.
82.48 சதவீத வாக்குகள் பதிவு
விக்கிராவாண்டி இடைத் தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் கே.அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக இடைத்தேர்தலை புறக்கணித்து இருந்தன.
நீட் - பிரமாண பத்திரம் தாக்கல்
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரி தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
மருத்துவ கலந்தாய்வு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்தது.
ராகுல் காந்தி ட்வீட்
பொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை ஐஐடி போன்ற மிகவும் கவுர்வமான கல்வி நிறுவனங்களே சந்திக்க தொடங்கி உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில் ஐஐடி வளாகத் தேர்வில் 19 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்விக்கு எதிரான பாஜகவின் மனப்பான்மையால் மாணவர்கள் எதிர்காலம் முடங்கி உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ட்வீட்.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதுவரை நடந்த தலா 3 போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
டாபிக்ஸ்