Makkaludan Mudhalvar Scheme: ‘மீண்டும் வருகிறது மக்களுடன் முதல்வர் திட்டம்! ஜூலை 15 முதல் ஆரம்பம்!
Makkaludan Mudhalvar Scheme: வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் 12,525 கிராம ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் 12,525 கிராம ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட மக்களுடன் முதலமைச்சர் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோவையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று கோவை மாநகரில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கிவைத்தார்கள்.
முதற்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.