Morning Top 10 News: ’தப்புமா அமைச்சர்களின் தலை! ஒலிம்பிக்கில் மாஸ்காட்டும் வினேஷ் போகத்' காலை டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Morning Top 10 News: ’தப்புமா அமைச்சர்களின் தலை! ஒலிம்பிக்கில் மாஸ்காட்டும் வினேஷ் போகத்' காலை டாப் 10 நியூஸ்!

Morning Top 10 News: ’தப்புமா அமைச்சர்களின் தலை! ஒலிம்பிக்கில் மாஸ்காட்டும் வினேஷ் போகத்' காலை டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Aug 07, 2024 11:34 AM IST

Morning Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Morning Top 10 News: ’தப்புமா அமைச்சர்களின் தலை! ஒலிம்பிக்கில் மாஸ்காட்டும் வினேஷ் போகத்' காலை டாப் 10 நியூஸ்!
Morning Top 10 News: ’தப்புமா அமைச்சர்களின் தலை! ஒலிம்பிக்கில் மாஸ்காட்டும் வினேஷ் போகத்' காலை டாப் 10 நியூஸ்!

மல்யுத்த போட்டியில் சாதித்த வினேஷ் போகத்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.  இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனையாகவும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமாக இருப்பவர் வினேஷ் போகத் (29). இவர் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ பிரிவில் போட்டியிடுகிறார்.

ஈட்டி எறிதலில் முத்திரை பதிப்பாரா நீரஜ் சோப்ரா?

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றி உள்ளார். இறுதிப் போட்டியில், சோப்ரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வரலாற்றில் பட்டத்தை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. இதன் முலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றால் தனிநபர் விளையாட்டில் ஒலிம்பிக்கில் அதிகம் அலங்கரிக்கப்பட்ட இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெருவார்.

அரையிறுதியில் தோற்ற இந்திய ஹாக்கி அணி

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (7வது), சுக்ஜீத் சிங் (36வது) ஆகியோர் கோல் அடிக்க, ஜெர்மனிக்கு கோன்சாலோ பெய்லட் (18வது), கிறிஸ்டோபர் ரூர் (27வது), மார்கோ மில்ட்காவ் (54வது) ஆகியோர் கோல் அடித்தனர். 

மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் 

இலங்கை கடற்படை கப்பல் மோதி மாயம் ஆன மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், கடலில் மூழ்கி காணாமல் போன திரு.இராமச்சந்திரன் குடும்பச் சூழ்நிலையைச் கருத்தில்கொண்டு அவருடைய குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார். 

இடைக்கால தலைவர் ஆனார் முகமது யூனிஸ்

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனீஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த செய்தியை பங்களாதேஷ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஜாய்னல் அபேடின் இதனைத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத் தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவு ஜனாதிபதி ஷஹாபுதீனுக்கும் பாகுபாடு எதிர்ப்பு மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இங்கிலாந்து அனுமதி மறுப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்க இங்கிலாந்து மறுப்பு தெரிவித்து உள்ளது. இதனால் சில நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் கைது

வங்கதேசத்தில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை ராணுவம் கைது செய்து வருகின்றது.

இந்துக்கள் மீது தாக்குதல் 

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்தியில் அங்கு வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. 

அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆனார் கமலா ஹாரீஸ்

அமெரிக்காவில் ஜனநாயாக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.