Top 10 News : வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை.. மாலை டாப் 10 செய்திகள்!
Evening Top 10 News: வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல் வரை நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
தென்காசி கடையநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். மேலும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும், மாவட்டக் கல்வி அலுவலகத்தையும், அங்கு கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தையும் பார்வையிட்டார்.
மேட்டூர் அணை நீர் வரத்து
MetturDam : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 22,200 கன அடியாக உள்ளது அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 22,000 கன அடியாக உள்ளது.
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநர்
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸில் வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி. துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் கைலாசநாதன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறித்தும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு
வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். பதவி விலகியதற்கு பிறகு தற்காலிகமாக இந்தியா வருவதற்கு ஷேக் ஹசீனா கோரிக்கை வைத்தார். நிலைமை மோசம் அடையவே, ஹசீனா கேட்டுக்கொண்டதால் அவரது விமானம் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி தரப்பட்டது. ஷேக் ஹசீனாவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றதால் அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்க அனுமதி தரப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வங்கதேசத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு விவகாரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
லால் கிருஷ்ண அத்வானி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 96 வயதான அரசியல் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவேஷம் தெலுங்கு மொழியில் ரீமேக்?
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா தகுதி
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் வீசி இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வீழ்த்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்