Morning Top 10 News: ’பிரதமரை ஓட விட்ட வங்கதேச மக்கள்! துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-morning top 10 news on august 06 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Morning Top 10 News: ’பிரதமரை ஓட விட்ட வங்கதேச மக்கள்! துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Morning Top 10 News: ’பிரதமரை ஓட விட்ட வங்கதேச மக்கள்! துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Aug 06, 2024 01:35 PM IST

Morning Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Morning Top 10 News: ’பிரதமரை ஓட விட்ட வங்கதேச மக்கள்! துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Morning Top 10 News: ’பிரதமரை ஓட விட்ட வங்கதேச மக்கள்! துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும். இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

நாட்டை விட்டு ஓடிய வங்கதேச பிரதமர் 

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரரக்ளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் அரசின் முடிவுக்கு எதிராக வெடித்த பெரும் வன்முறையால் பதவியை ராஜினாமா செய்த அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். 

முஜிபூர் ரஹ்மான் சிலை சேதம் 

வங்கதேச அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், முன்னாள் அதிபர் முஜிபூர் ரஹ்மானின் உருவசிலையையும் சேதம் செய்து உள்ளனர். 

வங்கதேசத்தில் இடைக்கால அரசு  

வங்கதேச நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் முகமது ஷாஹாபுதீன் அறிவித்து உள்ளார். 

வங்கதேச விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை

வங்கதேசத்தில் நடைபெறும் உள்நாட்டு கலவரம் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். 

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது குறித்து கோரிக்கைகள் வலுத்து உள்ளதே தவிர இன்னும் பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். 

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் 

நெல்லை மாநகராட்சி மேயராக திமுக சார்பில் போட்டியிட்ட கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு, திமுகவை எதிர்த்து போட்டியிட்ட பவுல் ராஜ் 23 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 

தூத்துக்குடி மீனவர்கள் கைது 

இலங்கை எல்லையில் மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

பாரீஸ் ஒலிம்பிக் - இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் 

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திஅய் வீரர் அவினாஷ் சேபிள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

பதக்கத்தை கோட்டைவிட்ட லக்‌ஷயா சென்

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.