தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi: இது டெல்டாக்காரராக முதல்வருக்கு கிடைத்த வெற்றி -அமைச்சர் உதயநிதி!

Udhayanidhi: இது டெல்டாக்காரராக முதல்வருக்கு கிடைத்த வெற்றி -அமைச்சர் உதயநிதி!

Divya Sekar HT Tamil
Apr 08, 2023 01:22 PM IST

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இது டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு கட்சியினரும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது, தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,” காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி”எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.அந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது. எல்லோரையும்விட இதில் நான் உறுதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்