தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோயில் குளத்தில் 5 பேர் மரணம்! யார் காரணம்? சேகர்பாபு பேரவையில் விளக்கம்!

கோயில் குளத்தில் 5 பேர் மரணம்! யார் காரணம்? சேகர்பாபு பேரவையில் விளக்கம்!

Kathiravan V HT Tamil
Apr 06, 2023 01:08 PM IST

”:தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது”

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திருக்கோயிலின் குளம் என்பது கோயிலுக்கு சொந்தமானது அல்ல; அது பஞ்சாயத்தால் நிர்வகிக்க கூடிய குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டுகாலமாகத்தான் தீர்த்தவாரி நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்தான் நடைபாதை, சுற்றுசுவர் ஆகியவற்றை 50 லட்சம் செலவில் ஏற்படுத்தி தந்தார்

கடந்த அண்டு 8-9-2022 அன்று தொல்லியல் துறை அனுமதி, மண்டல குழு அனுமதி, இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்று கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள், உடனடியாக இணை ஆணையாளர் அவர்கள் 6-9-2022 அன்று செயல் அலுவலர் ஒருவரை தக்காராக நியமித்தார்கள். இதற்கு எதிராக கோயிலில் உள்ளவர்கள் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது.

எது எப்படி இருந்தாலும் விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் போய்வுள்ளது. ராகவன், ராகவா, விக்னேஷ், சூர்யா, யோகேஸ்வரன் என்று 5 விலைமதிப்பில்லாத உயிர்கள் போயுள்ளது.

அந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற உடன் முதலமைச்சர் என்னை அழைத்து குளத்தை தூர்வாராமல் ஏன் வைத்திருந்தீர்கள் என்று கண்டித்தார்கள்.

ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதை இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இவ்வுளவு பெரிய இழப்பில் குற்றமாக சொல்ல நான் விரும்பவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு அமைச்சர் நேரடியாக சென்று ஆறுதல் கூறியதோடு, 2 லட்சம் ரூபாய் நிவரணமாக அளித்துள்ளார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஐந்து சிறுவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

IPL_Entry_Point

டாபிக்ஸ்