TN Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!

TN Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!

Kathiravan V HT Tamil
Sep 29, 2024 04:47 PM IST

TN Cabinet: தமிழ்நாடு அமைச்சர் அவையில் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ள பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

TN Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
TN Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!

புதிய அமைச்சர்களும் இலாகாகளும்!

  • செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
  • முனைவர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை, தொழில்கல்வித்துறை, எலட்ரானிக்ஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகள் ஒதுக்கீடு. 
  • ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலா மற்றும் கரும்பு ஆலைகள் மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
  • எஸ்.எம்.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

அமைச்சரவை மாற்றம் குறித்த விவரங்கள்

  • உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • சுற்றுலா துறை அமைச்சர் ஆக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாடு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது .
  • வனத்துறையை கவனித்து வந்த டாக்டர் எம்.மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை கவனித்து வந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறையை கவனித்து வந்த தங்கம் தென்னரசுவுக்கு சுற்றுசூழல் மாசுக்காட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.