தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’சென்னா ரெட்டியை கல்லால் அடித்தது போல் அடிக்க மாட்டோம்’ துரைமுருகன் ஆவேசம்

’சென்னா ரெட்டியை கல்லால் அடித்தது போல் அடிக்க மாட்டோம்’ துரைமுருகன் ஆவேசம்

Kathiravan V HT Tamil
Apr 10, 2023 02:00 PM IST

“யார் அப்பன் வீட்டு பணத்தை கொண்ப்போய் இத காட்டுற; பாஜகவாக இருந்தால் போய் சேர்ந்துகோ அந்த கட்சில” - துரைமுருகன் ஆவேசம்

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் துரைமுருகனின் முகபாவங்கள்
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் துரைமுருகனின் முகபாவங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

”நாக்கை தொங்கப்போடுவார்கள்”

பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் கவர்னர்கள்தான். முதல்முதலாக மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான்.

மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகராறு காரணாமாக ’சபாஷ் கொட்டி’ அவரை ராஜ்ஜியசபா தலைவராக்கி உள்ளார்கள். அதை பார்த்துதான் நம்முடைய கவர்னருக்கு ஒரு நப்பாசை; அடடா வங்கத்திலே அவர் செய்து அவர் ஆயிருக்கிறாரே அக்லிஸ்ட் நமக்கு இது கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போடுவார்கள்.

”வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்”

ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன், பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. 

இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

ஆளுநரை உரையில் மாநில அரசு சொன்னதற்கு மாறாக மாற்றி படித்த போது ‘மாநிலத்தின் நிலைமை தெரியாமல் கூறுக் கெட்டத்தனமாக பேசினால் இதுதான் நிலை’ என்று ஹிந்து பத்திரிக்கை தனது தலையங்கத்தில் எழுதியது.

ஆளுநருக்கு ஒரு மசோதாவின் மீது சந்தேகம் இருந்தால் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் அவரே வைத்துக் கொள்ளலாம், எவ்வுளவு நாள் வைத்துக் கொள்ளலாம்; சாகும்வரை வைத்துக் கொள்ளலாம். இதான் அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டை, அதற்கு கால நிர்ணயம் வேண்டும் என்று முதல்வர் சொல்லி உள்ளார்.

இரு மசோதாவில் சந்தேகம் இருந்தால் அந்த சந்தேகத்திற்கான பதிலை மாநில அரசு அனுப்ப வேண்டும். திருப்பி அனுப்பினால் அதை எக்காரணம் கொண்டும் இதனை நிறுத்தக்கூடாது. இதுதான் சட்டம்.

”லாயக்கு இல்லாமல் இருப்பவன்”

இந்திய குடிமகனாக இருக்கவே லாயக்கு இல்லாமல் இருப்பவன்தான் அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருக்க முடியும். உங்கள் கட்சிக்கு ஒரு கொள்கை இருந்தால் ராஜினாமா பண்ணீட்டு போங்கோ.

”கல்லால் அடிக்க மாட்டோம்”

குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஒலிபரப்பட்ட படத்தில் காந்தி, நேரு படம் இல்லை; சாவர்க்கர் படம்தான் இருந்தது. யார் அப்பன் வீட்டு பணத்தை கொடுப்போய் இத காட்டுற; பாஜகவாக இருந்தால் ’போய் சேர்ந்துகோ அந்த கட்சில’ என்று துரைமுருகன் ஆக்ரோஷமாக பேசினார். மேலும் நாங்கள் சென்னா ரெட்டி மீது கல் விட்டு அடித்தது போல் செய்யமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்